Showing posts with label விநாயகர். Show all posts
Showing posts with label விநாயகர். Show all posts

Friday, March 24, 2017

ப்ரபோ கணபதே .....


ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே (ப்ரபோ)


சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன்
சன்னதி சரண் அடைந்தோமே |
சாந்தசித்த சௌபாக்யம் யாவையும்
தந்தருள் சத்குரு நீயே || (ப்ரபோ)


ஆதிமூல கணநாத கஜானன
அற்புத தவள ஸ்வரூபா |
தேவ தேவ ஜெய விஜய விநாயகா
சின்மயா பர சிவ தீபா || (ப்ரபோ)


ஞான வைராக்ய விசார சார ஸ்வர
ராகலய நடன பாதா |
நாம பஜன குண கீர்த்தன நவவித
நாயக ஜய ஜகந்நாதா || (ப்ரபோ)


தேடி தேடி எங்கோ ஓடுகின்றார்
உன்னை தேடி கண்டுக் கொள்ளலாமே  |
கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய
குன்றென விளங்கும் பெம்மானே || (ப்ரபோ)


பார்வதி பால அபார வார வர
பரம பகவ பவ தரணா |
பக்த ஜன சுமுக பிரணவ விநாயக
பாவன பரிமள சரணா || (ப்ரபோ)